• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை பதிவு செய்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் ஒழுங்கு விதிகளைத் தயாரித்தல்

- இலங்கையின் யானைகளை அதனது இயற்கையான வாழ்விடத்திலும் இதற்குப் புறம்பாக வீடு சார்ந்த இடங்களின் கீழும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்ட ரீதியான ஏற்பாடுகள் விலங்குள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் II ஆம் பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 1991‑05‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 662/4 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம் பழக்கப்பட்ட யானைகளுக்கு சட்டரீதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பழக்கப்பட்ட யானைகளின் நலநோம்புகைகளை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கையை பேணுவதற்குமுள்ள ஒழுங்குவிதிகளை இற்றைவரைப்படுத்துதவற்கும் இதனோடு தொடர்புபட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் வனசீவராசிகள் வளப் பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.