• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான புதிய அணுசக்தி சட்டம்

- இலங்கை அணுசக்தி சட்டத்தின் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு இதை பாராளுமன்றத்தில் சமர்ப்ப்பதற்கும் தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்டமூலத்தின் மூலம் பின்வரும் நிறுவனங்களை தாபிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு வழிவகுக்கப்படுகின்றது.

* இலங்கை அணுசக்தி சபை -தேசிய அபிவிருத்தி நோக்கங்களுக்கு அணுவிஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான மேம்பாடும ஊக்குவிப்பும்; அத்துடன்

* இலங்கை அணுசக்தி ஒழுங்குறுத்துகை சபை - கதிரியக்கம் மற்றும் அணுமூலங்களின் பாதுகாப்புத் தொடர்பிலான கட்டுப்பாட்டு நடைமுறைகள்.