• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இத்தாலி, மிலானில் இலங்கைக்கான கொன்சுலேட் ஜெனரல் அலுவலகமொன்றை நிறுவுவதற்கான பிரேரிப்பு

- இத்தாலியின் மிலான் நகரமானது பிரதான கைத்தொழில், வர்த்தக மற்றும் நிதிசார் மத்திய நிலையமாகும். இத்தாலியின் பங்குச்சந்தை பரிமாற்றம், பிரதான தேசிய வங்கிகளின் தலைமையகங்கள் மற்றும் பல்தேசிய கம்பனிகள் பல இந்த வலயத்தில் அமைந்துள்ளன. இத்தாலியுடன் இலங்கை மேற்கொள்கின்ற வியாபார நடவடிக்கைகளில் 75% இற்கு அதிகமானவை கையாளப்படுகின்றது. மிலானிலுள்ள இத்தாலி கம்பனிகளினால் ஆகும். இலங்கை மக்கள் மிலானில் வசிக்கும் 6 வது பெரிய இடம்பெயர் சமூகமாகும். இத்தாலி அதிகாரபீடங்களின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர், இத்தாலி, மிலானில் இலங்கைக்கான கொன்சுலேட் ஜெனரல் அலுவலகமொன்றை நிறுவுவதற்கும் இது சார்ந்த விடயங்களை மேற்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.