• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுத்திர விஞ்ஞான, சுற்றாடல் பற்றிய அதிசிறந்த கேந்திர நிலையமொன்றைத் தாபித்தல்

- இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளின் சங்கம் (IORA) தற்பொழுது 20 உறுப்பாண்மை நாடுகளைக் கொண்டதுடன் இதன் முலம் பொது நோக்கங்களை விருத்தி செய்து கொள்வதற்கு புரிந்துணர்வுடன் நன்மைகளை எய்துகொள்வதற்கு சந்தை மற்றும் முதலீடு தொடர்பிலான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் குழுவின் நாடுகளுக்கிடையே வலய ரீதியான வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கு உச்ச சந்தர்ப்பத்தை வழங்குவதும் இதன் நோக்கமாகவுள்ளது. உள்நாட்டு தரப்பினர்கள், IORA செயலகம் மற்றும் IORA உறுப்பாண்மை நாடுகளுடன் கலந்துரையாடியும் அவர்களது ஒத்துழைப்புடனும் சமுத்திர விஞ்ஞான, சுற்றாடல் பற்றிய அதிசிறந்த கேந்திர நிலையமொன்றைத் இலங்கையில் தாபிப்பதற்கும் அது சார்ந்த விடயங்களை மேற்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.