• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்கு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 22 ஆம் இலக்க ஒழங்குவிதியை நீக்குதல்

- இந்த ஒழுங்குவிதியின் மூலம் இனங்காணப்படக்கூடிய இலக்கத்துடனான தகட்டு துண்டொன்று சகல மாடுகளினதும் காதுகளில் இணைக்கப்பட்டு அரசாங்க கால்நடை மருத்துவ உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்படுகின்ற மாடுகளை பதிவு செய்வதற்காக ஒரு மாட்டுக்கு 20/- ரூபா வீதம் கட்டணமொன்றை விதித்து நோய்க் கட்டுப்பாட்டுக்கு அல்லது சினைப்படுத்தலுக்கு அல்லது விலங்குகளை வெவ்வேறாக்கும் போது மாடுகளை இனங்காணும் முறை போன்றன இதற்கான பிரதான காரணமாகும். சிறிய அளவிலான பண்ணையாளர்களைப் போன்று பெரிய அளவிலான பண்ணையாளர்களும் இது தொடர்பில் அவர்களது ஒத்துழைப்பை தெரிவிக்காததன் காரணத்தினால் மாடுகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம் திட்டமிட்டவாறு மேற்கொண்டு தனது திணைக்களத்திற்குரிய கடினமான பணியாக உள்ளமையும் அரசாங்கத்தின் பாற்பண்ணை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் இது பாரியளவு தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. தற்பொழுது நிலவுகின்ற கஷ்டநிலையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒழுங்குவிதி இலக்கம் 22 ஐ செயல்வலுப்படுத்துவதை இடைநிறுவத்துவதன் மூலம் மாடுகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டம் இரண்டு (02) வருடகாலத்திற்கு கட்டணங்களை அறவிடாமல் மேற்கொள்வதற்கு கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.