• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வங்கித்துறைகளை ஒன்றிணைத்தல்

- 2014 - வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன DFCC வங்கி DFCC வர்தன வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கியின் NDB பிரேரிக்கப்பட்ட ஒருங்கிணைத்தல் வசதிகளை வழங்கும் பொருட்டு DFCC வங்கி 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் கம்பனியாக கூட்டிணைப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இதற்கு சட்டமா அதிபரின் இசைவாக்கத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.