• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கௌரவ எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் அமைந்துள்ள மனையிடத்திற்குள் அவருடைய அலுவலகத்திற்காக மேலதிகக் கட்டடமொன்றை நிருமாணித்தல்

- கௌரவ எதிர்கட்சித் தலைவரின் கொழும்பு அலுவலகமாக தற்பொழுது உபயோகப்படுத்தப்படுகின்ற இலக்கம் 30, சேர் மார்க்கஸ் பெர்ணாந்து மாவத்தை கொழும்பு 07 இல் அமைந்துள்ள மனையிடத்தில் அவரது அலுவலகத்திற்காக மேலதிக கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. விலைகளின் அதிகரிப்பு காரணத்தினால் இந்த கருத்திட்டத்தின் மொத்த செலவின மதிப்பீடு 28,400,000.00 ரூபாவிலிருந்து 56,280,036.49 ரூபாவாக அதிகரிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.