• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இனங்களுக்கிடையில் பரஸ்பர நட்புறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குறுத்தவதற்கான பொறிமுறையொன்றை வகுத்தமைத்தல்

- கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் மூலம் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவது தொடர்பில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களின் தேசிய மட்டத்திலிருந்து வலய மட்டம் வரையிலான நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை பலப்படுத்தும் இலக்கைக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்கும் வசதிகள் வழங்குவதற்கும் அதிமேதகைய சனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழும் மாண்புமிகு அமைச்சர்களைக் கொண்டதுமான சமூகங்களுக்கிடையிலான சமரசம் மற்றும் சகவாழ்வு தொடர்பில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும்; அத்துடன்

* இந்த அமைச்சரவை உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்கு சனாதிபதியின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சுக்களின் செயலாளர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும்.