• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தின் பிரதான வேலைகளுக்கான நிருமாணிப்பு பணிகளை செயற்படுத்துதல்

- தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டத்தில் தல்பிட்டிகலவில் உமா ஓயாவிற்குக் குறுக்காக 45.7 மீற்றர் உயரமான அணையொன்றை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு இது 15.6 கன அளவு மீற்றர் கொள்ளவினைக் கொண்டுள்ளது. இது தற்போது வெலஓயாவிலிருந்தும் குறைநிரப்பாக உமா ஓயா திசை திருப்பலின் மூலமும் நீர் வழங்கப்படும் பத்மெடில திட்டத்தின் 810 ஹெக்டயர்களுக்கு வழங்கப்படும் நீர்ப்பாசனம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் மினிபே, பத்மெடில அணைத்திட்டங்களில் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையும் நீர்ப்பாசன தேவையையும் உறுதி செய்கின்றது. இந்த கருத்திட்டத்தின் மூலம் 2X7.5 மெ.வொ. ஆற்றலைக் கொண்ட நீர் மின் நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும்கூட எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் மூலம் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் 51 கிகாவொட் நீர் மின்சக்தியானது தேசிய மின்சார முறைக்குள் சேர்க்கப்படும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த நிருமாணிப்பு வேலைகளை வழங்குவதற்காக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர்மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.