• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களின் மருத்துவ பீடங்களுக்கும் பேராதனை பல்கலைக்கழத்தின் இணை விஞ்ஞான பீடத்திற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்

- ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் இணை சுகாதார பீடம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பாதுகாப்பு பீடம், பேராதனை பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார பீடம் என்பன புதிதாகத் தாபிக்கப்பட்ட பீடங்களாவதோடு, கற்பித்தல் மற்றும் கற்கும் செயற்பாடுகளுக்கு தேவையான உபகரணங்களையும் கருவிகளையும் வழங்குவதன் மூலம் நாட்டிலுள்ள ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களின் மட்டங்களுக்கு இந்த பீடங்களின் தரத்தை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொன்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் அதுசார்ந்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.