• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிரி இப்பன்வெவ நீர்வழங்கல் கருத்திட்டம், படல் கும்புற - அலுபொத்த நீர் வழங்கல் கருத்திட்டம்

- கிரி இப்பன்வெவ நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் படல் கும்புற - அலுபொத்த நீர் வழங்கல் கருத்திட்டத்தையும் நடைமுறைப் படுத்துவதற்கான தொழினுட்ப மற்றும் நிதி பிரேரிப்புகளைக் கோருவதற்கும் அவ்வாறு கிடைக்கும் பிரேரிப்புகளை மதிப்பிடும் பொருட்டு கருத்திட்டக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளை பரிசீலனை செய்வதற்குமாக அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.