• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தம்புத்தேகம நீர்வழங்கல் கருத் திட்டம் - சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சிவில், பொறிமுறை உட்பட பொறியியல் வேலைகள் சார்பில் வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தம்

- இந்தக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தலாவ, தம்புத்தேகம, கல்நாவ பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குடிநீர்வசதிகளை வழங்கி குழாய் நீர் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்காகும். மேற்போந்த நீர் விநியோகக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இயைபுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்குமாக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.