• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக குடியிருப்புத் தின விழா - 2014

- நகர வீடமைப்பு மற்றும் மனித குடியேற்றங்கள் அபிவிருத்தி சார்ந்த முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகளினால் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒக்ரோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமையை "உலக குடியிருப்புத் தினமாக" கொண்டாடப்படுகின்றது. 2014 ஒக்ரோபர் மாதம் 06 ஆம் திகதி திங்கட்கிழமையன்று இந்த ஆண்டிற்கான குடியிருப்பு தினத்தின் தொனிப்பொருளாக "சேரியிலிருந்து எழுப்பப்படும் குரல்" (Voices from Slums) என்பது ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொனிப்பொருளின் மூலம் தெரிவிக்கும் கருத்தானது நகர குடிசைகளில் (சேரிகளில்) வசிக்கும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி நோக்கங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலாகும். கொழும்பு நகரத்திலும் நாடு முழுவதிலும் உள்ள நகர பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுவோர்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்பு வசதிகளை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் உயர் முன்னுரிமை வழங்கியுள்ளது. உலக குடியிருப்பு தினத்தை கொண்டாடும் முகமாக மேற்போந்த தொனிப்பொருளின் கீழ் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு எண்ணியுள்ளது. இது தொடர்பிலான பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.