• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனித இதய ஊடிதழ் வங்கியொன்றைத் தாபித்தல்

- இலங்கையிலே ஆண்டொன்றில் 2500 தொடக்கம் 3000 வரையிலான குழந்தைகள் இயற்கையாகவே இருதய நோய்களுடன் பிறக்கின்றதென மதிப்பிடப்பட்டுள்ள தோடு, அவர்களில் சுமார் 2000 பேர்களுக்கு இந்த நோய் நிலைமையை குணமாக்கும் பொருட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. தற்போது இலங்கையில் இத்தகைய அறுவைச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் இதய ஊடிதலொன்று 300,000/= ரூபாவாவதோடு, மாடுகள் போன்ற பிராணிகளிலிருந்து பெறப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஊடிதழ்களுக்காக செலவுகள் அரசாங்கத்தினால் வகிக்கப்படுகின்றது. இலங்கையில் இருதய நோய்களுக்கு ஆளாகியுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளின் துரித முன்னேற்றத்துடன் இதய ஊடிதழ், ஊடிதழ் மாற்று சிகிச்சைக்குத் தேவையான சிசுத்தொகுதி மனித ஊடிதழ் வங்கியொன்றை தாபிப்பது முதன்மை பணியொன்றாகவுள்ளது. மனித இதய ஊடிதழ் வங்கியொன்றைத் தாபிக்கும் செயற்பாடானது இலங்கை சிறுவர் இருதய நோய்க் கருத்திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான தொழினுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகம் ஏற்கனவே உடன்பாடு தெரிவித்துள்ளது. சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் மனித ஊடிதழ் வங்கியொன்றைத் தாபிப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.