• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீனா அபிவிருத்தி வங்கியின் (CDB) நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கான நிதி வழங்குகை

- பின்வரும் நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்குவதற்கு சீன அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது:

* கட்டான நீர் வழங்கல் கருத்திட்டம்;
* தம்புத்தேகம நீர் வழங்கல் கருத்திட்டம்; அத்துடன்
* கண்டி வடக்கு நீர் வழங்கல் கருத்திட்டம்.

கடன் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.