• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை சருவதேச கேந்திர நிலையத்திற்காக வீதிகளையும் மேற்பாலங்களையும் நிருமாணிப்பதற்கான கருத்திட்டம்

- 96 கிலோ மீற்றர்கள் மொத்த தூரத்தைக் கொண்ட தெற்கு அதிவேகப் பாதை நீடிக்கும் கருத்திட்டத்தின் முதலாவது பகுதி (மாத்தறையிலிருந்து வெலியத்தை வரை - 30 கி.மீ), இரண்டாவது பகுதி (பெலியத்தையிலிருந்து பெட்டிய வரை - 26 கி.மீ) , மூன்றாவது பகுதி (வெட்டியவிலிருந்து மத்தள வரை - 15 கி.மீ), நாலாவது பகுதி (மத்தளையிலிருந்து அந்தரவெவ ஊடாக அம்பாந்தோட்டை வரை - 25 கி.மீ) என்னும் வகையில் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. அம்பாந்தோட்டை சருவதேச கேந்திர நிலைய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் வீதிகளையும் மேம்பாலங்களையும் நிருமாணித்தல், சூரியவெவ - கல்வெல சந்தி - மொரகெட்டிய - எம்பிலிபிட்டிய வீதி (18.28 கி.மீ), ரன்ன - வெட்டிய வீதி (16.15 கி.மீ.) என்பன தெற்கு அதிவேகப் பாதையின் மூன்றாம் பகுதிக்கு உரியவையாகும். இந்த நோக்கத்திற்காக கடன் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.