• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிச்சுற்றுவட்ட அதிவேகப்பாதை - வடக்கு பகுதி II இன் (கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரை) நிருமாணிப்புக் கருத்திட்டம்

- கொட்டாவையிலிருந்து ஆரம்பித்து கடுவெல, கடவத்தை ஊடாக கெரவலபிட்டியவில் முடிவடையும் வெளிச்சுற்றுவட்ட அதிவேகப்பாதை மொத்தமாக 29.22 கிலோ மீற்றர்கள் கொண்ட நீளப் பாதையாகும். இது கொழும்பு நகரத்தைச் சுற்றி தெற்கு அதிவேகப் பாதை, கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேகப் பாதை, வடக்கு அதிவேகப் பாதை உட்பட ஏனைய பிரதான தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும். கொட்டாவையிலிருந்து கடுவெல (11.0 கிலோ மீற்றர்), கடுவெலவிலிருந்து கடவத்தை (8.9 கிலோ மீற்றர்) , கடவத்தையிலிருந்து கெரவலபிட்டிய (9.32 கிலோ மீற்றர்) என்னும் வகையில் இந்தக் கருத்திட்டம் மூன்று (03) பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த அதிவேகப் பாதையின் வடக்கு பகுதி II இன் (கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரை) நிருமாணிப்புக்குரிய கடன் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.