• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையை நியமித்தல்

- அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டினை ஒழுங்குறுத்துவதற்கும் அதன் வெளித்தெரியும் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் கொள்வனவு வழிகாட்டல் கோவையிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2005 ஆம் ஆண்டிலிருந்து கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையானது நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையானது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுக்களினதும் இணக்கப் பேச்சுக் குழுக்களினதும் சிபாரிசுகளின் மீது திருப்தியுறாத வெற்றிபெறாத கேள்விதாரர்களினால் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகளைப் பரிசீலனை செய்து அதுதொடர்பிலான அதன் சிபாரிசுகளை பரிசீலனை செய்யும் பொருட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காகத் தாபிக்கப்பட்டுள்ளது. 2014‑08‑16 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக பின்வருவோர்களை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபைக்கு நியமிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* திரு.ஹெக்டர் எஸ்.யாப்பா அவர்கள்,
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும்
கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் முன்னாள் பதில் தலைவரும்;

* திரு.பி.ஏ.பிரேமதிலக்க அவர்கள்,
முன்னாள் கணக்காய்வாளர் அதிபதியும்
கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் முன்னாள் உறுப்பினரும்; அத்துடன்

* திரு.வீ.கே.நாணயக்கார அவர்கள்,
முன்னாள் பிரதம அமைச்சரின் செயலாளரும்
சில அமைச்சுக்களின் முன்னாள் செயலாளரும்.