தூயசக்தி நுழைவினை மேம்படுத்தும் கருத்திட்டம் - பொதி 4 - Medium Voltage அனுப்பீட்டு உப கருத்திட்டம், பகுதி B
- இந்தக் கருத்திட்டத்திற்கு பின்வரும் பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன :
* கிரிபத்கும்புர நெய்யறி துணை நிலையத்திலிருந்து உத்தேச கெபித்திகொல்லாவ துணை நிலையம் வரை (15 கி.மீ) 33 கிலோ வொட் இரட்டை சுற்று கோபுர வழி மற்றும் அதற்குரிய பணிகள்;
* கல்மடு சந்தியிலிருந்து அக்கரைப்பற்று நெய்யறி நிலையம் வரை (18 கி.மீ) 33 கிலோ வொட் இரட்டை சுற்று கோபுர வழி மற்றும் அதற்குரிய பணிகள்; அத்துடன்
* உத்தேச அக்கரைப்பற்று துணை நிலையத்திலிருந்து உத்தேச பொத்துவில் துணை நிலையம் வரை (42 கி.மீ) 33 கிலோ வொட் இரட்டை சுற்று கோபுர வழி மற்றும் அதற்குரிய பணிகள்.
அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான கேள்விதாரர்களிடமிருந்து ஆகக்குறைந்த விலைகளை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.