• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2,000 IU Epoetin தடுப்பூசிகள் முன்னரே நிரப்பப்பட்ட 30,000 சிரிஞ்சர்களும் 4,000 IU, 5,000 IU Epoetin தடுப்பூசிகள் முன்னரே நிரப்பப்பட்ட 175,000 சிரிஞ்சர்களும் கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான கேள்விதாரர்களிடமிருந்து ஆகக்குறைந்த விலைகளை முன்வைத்த கேள்விதாரர்களுக்கு மேற்போந்த இரண்டு (02) கேள்விகளையும் பின்வருமாறு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* 37,500.00 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த தொகைக்கு 2,000 IU Epoetin தடுப்பூசிகள் முன்னரே நிரப்பப்பட்ட 30,000 சிரிஞ்சர்களை வழங்குதல்; அத்துடன்

* 350,000.00 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த தொகைக்கு 4,000 IU Epoetin தடுப்பூசிகள் 5,000 IU முன்னரே நிரப்பப்பட்ட 175,000 சிரிஞ்சர்களை வழங்குதல்.