• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச ருவண்புர அதிவேக பாதைக்கான சாத்தியத் தகவாய்வு, சுற்றாடல் தாக்க மதிப்பீடு போன்றவற்றைச் செய்வதற்கான மதியுரைச் சேவைகளை வழங்குதல்

- உத்தேச ருவண்புர அதிவேக பாதைக்கான வீதியின் எல்லை தெற்கு அதிவேக பாதையின் ககதுடுவ இடமாற்றப் பிரதேசத்தில் ஆரம்பித்து பெல்மடுல்ல - எம்பிலிபிட்டிய - நோனாகம வீதியின் 3 ஆம் கிலோ மீற்றரில் முடிவடையும். ஹொரன, இங்கிரிய, கிரிஎல்ல, இரத்தினபுரி (குருவிட்ட), திருவானகெட்டிய ஆகிய பிரதேசங்களில் இடமாற்ற பிரதேசங்களை நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. 4 ஓட்டப் பாதைகளைக் கொண்ட இந்த அதிவேகப் பாதையின் முழுமையான தூரம் சுமார் 71 கிலோ மீற்றர்களாகும். இந்த நோக்கத்திற்கான மதியுரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அமைச்சரவைக்கு சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் மதியுரைக் கொள்வனவுக் குழுவொன்றை நியமிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.