• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுகின்ற முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3 - II கட்டம் - மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிவில் வேலை ஒப்பந்தங்களை வழங்குதல்

- 2015 தெயட்ட கிருள தேசிய கண்காட்சியின் நிமித்தம் தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 வீதிகள் புனரமைப்பதற்காக இனங்காணப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கமைவாக மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.