• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கமத்தொழிலில் கம இரசாயன பொருட்களின் பாவனையை குறைப்பதற்கான வேலைத்திட்டம்

- அண்ணளவாக 8,000 மெற்றிக் தொன் கம இரசாயன பொருட்களும் 900,000 மெற்றிக் தொன் இரசாயன பசளையும் வருடாந்தம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றி 2020 ஆம் ஆண்டளவில் கம இரசாயன பொருட்களினதும் களைநாசினிகளினதும் பாவனையைக் குறைப்பதற்கு கமத்தொழில் அமைச்சினால் வேலைத் திட்டமொன்று வகுத்தமைக்கப் பட்டுள்ளது.

* கம இரசாயன பொருட்களினதும் களைநாசினிகளினதும் பாவனையைக் குறைப்பதற்கும்;

* கமத்தொழில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களை பயிர் தனிமுறைசிகிச்சை தாவரஇன மருத்துவர்களாக நியமித்தல்; அத்துடன்

* சேதனப் பசளை கிராமங்களைத் தாபித்தல்.

மேற்போந்த தகவல்கள் கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.