• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கடன் தகவல் பணியகத்திற்காக புதிய கடன் தகவல் வகைமுறையொன்றை கொள்வனவு செய்தல்

- 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க கடன் தகவல் (திருத்த) சட்டத்தின் கீழ் 1990 ஆம் ஆண்டில் இலங்கை கடன் தகவல் பணியகம் தாபிக்கப்பட்டது கடன் தகவல்களைத் திரட்டுவதற்கும், ஒப்பிடுவதற்கும் அத்துடன் இந்த கடன் தகவல்களை கடன் வழங்கும் உறுப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதற்குமாகும். நாட்டில் நிலவும் சமாதான சூழ்நிலைகளுடன் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதோடு, பல் பொருளாதார துறையில் ஏற்பட்டுள்ள விருத்தி காரணமாக அங்கத்துவ நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் தகவல்கள் தொடர்பிலுள்ள கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன. இலங்கை கடன் தகவல் பணியகத்தின் உத்தேச தகவல் மற்றும் தொலைதொடர்பாடல் தொழினுட்ப வகைமுறையின் ஊடாக கடன் தகவல்களை இணையதளத்தின் ஊடாக மிக விரைவில் அனுப்புவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் சகல நிதி நிறுவனங்களுக்கும் இயலுமாகும் என்பதோடு, கடன் தகவல்களின் தரமும் பிழையற்ற தன்மையும் அதிகரிக்கும். இலங்கை கடன் தகவல் பணியகத்திற்கு புதிய தகவல் மற்றும் தொலைதொடர்பாடல் தொழினுட்ப வகைமுறையை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.