• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் துறையின் கேள்வியினை பூர்த்தி செய்யும் பொருட்டு திறன்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (2014-2020) கீழ் வாழ்க்கை தொழில்பயிற்சி நிலைய முறைமையை விரிவுபடுத்துதல்

- திறன்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட (2014-2020) கண்காட்சியும் திறமுறை வழிகாட்டலும் அத்துடன் இவற்றுக்கு அமைவாக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களினால் கைத்தொழில் கேள்விகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வழங்குவதனை விரிவுபடுத்தும் நோக்குடன் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு குச்சவெளி, ஹொரண, அகங்கம, இரத்மலானை ஆகிய இடங்களில் புதிய நான்கு (04) தொழிற்பயிற்சி நிலையங்கள் நிருமாணிக்கப்படுகின்றன. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.