• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புவியியல் தொலைக்காட்சி ஔிபரப்பு பணிகளை இலக்க முறைப்படுத்தல் கருத்திட்டம் - “ரூ - சங்யா”

- அலைவரிசைகளின் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை மேம்படுத்துவதன் மூலம் முழு நாட்டையும் தழுவும் வகையில் பொதுமக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் சாத்தியத்தை அதிகரிக்கும் பொருட்டு புவியியல் தொலைக்காட்சி ஔிபரப்பு பணிகளை இலக்க முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் தொலைக்காட்சி ஔிபரப்பு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பாட்டு மற்றும் அனுப்பீட்டுச் செலவுகளை குறைப்பதற்கு பங்களிப்பு நல்கி இந்த தொழினுட்பத்தை பயன்படுத்துவோருக்கு அதிசிறந்த படங்கள் உட்பட ஒலி அதேபோன்று பரந்துபட்ட அளவில் தெரிவு செய்யக்கூடிய அலைவரிசைகள் உட்பட நிகழ்ச்சிகளை கண்டுகழிப்பதற்கு இடவசதியளித்தல் போன்ற உயர் சேவைகள் வழங்குதலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் ஊடாக 13,717 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட (அண்ணளவாக 17,396 மில்லியன் ரூபா) கடன் தொகையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் தொகைக்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.