• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகர திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் - நகர திண்மக் கழிவு அகற்றும் வழிமுறையொன்றின் மூலம் கொழும்பு நகரத்தில் சேரும் திண்மக் கழிவுகளை புத்தளம் அருவாக்காலு பிரதேசத்துக்கு மாற்றுதலும் அகற்றுதலும்

- கொழும்பு தலைநகரத்திற்கு அண்மைய பிரதேசங்களில் சேரும் நகர கழிவுப் பொருட்களை அகற்றுவதற்காக சுற்றாடல் ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் பொருளாதார ரீதியில் செயற்படுத்தக் கூடியதுமான தீர்வொன்று பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. கொழும்பு நகரத்தில் சேர்க்கப்படும் நாளாந்த நகர திண்மக் கழிவுகள் சுமார் 700 மெற்றிக்தொன் என அளவிடப்பட்டுள்ளதோடு, கொழும்பு தலைநகர பிரதேசத்தின் நகரமயமாக்கப்பட்ட ஏனைய உள்ளூராட்சி அதிகாரப் பிரரேதசங்களில் அவ்வாறு சேரும் நகர திண்மக் கழிவுகளுடன் எடுக்கும் போது நாளொன்றுக்கு சுமார் அது 1,200 மெற்றிக் தொன்களாகும். புத்தளம் மாவட்டத்தின் அருவாக்காடு பிரதேசத்தில் துப்பரவேற்பாட்டு கழிவுப் பொருட்களை இடும் இடமொன்றை நிருமாணித்து மீதொட்டமுள்ள இடமாற்ற நிலையத்திலிருந்து திண்மக் கழிவுகளை புகையிரதத்தின் மூலம் கொண்டு செல்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள துப்பரவேற்பாட்டு கழிவுத் தடுப்பு சருவதேச தரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும். புகையிரதத் திணைக்களத்தினால் புகையிரதப் பாதை நிருமாணிப்புக்கான திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, திறந்த புகையிரத பெட்டிகள், புகையிரத எஞ்சின்கள் தொடர்பிலும் கூட கட்டளை விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கருத்திட்டத்தின் மொத்த செலவு 107 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும் (இலங்கை ரூபா 10,017 மில்லியன்). இது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.