• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 - 2017 நடுத்தவணை கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பும் 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்தலும்

- 2016 ஆம் ஆண்டளவில் இலங்கையை வறுமையற்ற நாடொன்றாக மாற்றும் அத்துடன் தனி ஆள் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் அரசாங்கத்தின் இரண்டாவது ஐந்துவருட கால அபிவிருத்திக் கொள்கை கட்டமைப்பு 2011 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோர் உட்பட, வறுமை நிலைமையிலுள்ள குடும்பங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி முக்கியமாக வாழ்வாதாரம், தொழில்வாய்ப்புகளை கிடைக்கக் கூடியதாக செய்தல், உணவு விநியோகம், சக்தி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம் அபிவிருத்தியை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் 2015 - 2017 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. சமூக அபிவிருத்தி, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார சுட்டிகளின் படி தேசிய சராசரியை விட குறைந்த நிலையிலுள்ள மாவட்டங்களின் சுகாதாரம், கல்வி, வீதி, சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான நுழைவினை அதிகரிப்பதற்கு முன்னுரிமை வழங்கி 2015 - 2017 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 2015 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.