• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கான அணுசக்தி பற்றிய புதிய சட்டமூலம்

- 1969 ஆம் ஆண்டின்16 ஆம் இலக்க அணுசக்தி அதிகாரசபை சட்டத்தின் மூலம் அணுசக்தி அதிகாரசபையை தாபித்தல் உட்பட அதன் தத்துவங்களையும் பணிகளையும் கையளித்தல் தொடர்பிலான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அணுசக்தி பாவனை தொடர்புற்ற சட்டங்களில் கணிசமான அளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதோடு, இந்த சட்டத்திற்கு புதிய சில ஏற்பாடுகளை உள்வாங்கும் தேவை எழுந்துள்ளமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கையில் அணுசிதைவார்ந்த கதிர்வீச்சு மற்றும் கதிர்வீச்சு தோற்றுவாய்களிலிருந்து சேதம் விளைவிக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து ஆட்களை, சமூகத்தை, சுற்றாடலை பாதுகாத்துக் கொள்ளல் அடங்கலாக தேசிய அபிவிருத்தியின் பொருட்டு சுகாதாரம், கைத்தொழில், சுற்றாடல் மற்றும் கமத்தொழில் துறைகளில் அணுசக்தி மற்றும் அணுசக்தி தொழினுட்பத்தை பயனுள்ள வகையிலும் அமைதியான முறையிலும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட வேண்டிய சகல விடயங்களும் இந்த சட்டமூலத்தின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இலங்கை சகல அணுசக்தி செயற்பாடுகளையும் அமைதியான நோக்கங்களுக்காக மாத்திரம் செய்கின்றதெனவும் அணுசக்தி ஆயுதங்கள் அல்லது பிற அணுசக்தி வெடிப்பொருட்கள் உற்பத்தி செய்யவோ அல்லது சுவீகரிக்கவோ தடைசெய்கின்றதெனவும் திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்றது. இந்த சட்டமூலத்தின் ஊடாக "இலங்கை அணுசக்தி சபை" மற்றும் "இலங்கை அணுசக்தி ஒழுங்குறுத்துகை சபை" என்னும் இரண்டு (02) நிறுவனங்களை தாபிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த சட்டமூலத்தை முதலில் அதன் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.