• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் (திருத்த) சட்டமூலம்

- நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த சட்டமூலம், முதலில் அதன் சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டமூலத்தின் ஊடாக பின்வரும் பணிகள் நிறைவேற்றப்படக்கூடிய விதத்தில் காப்புறுதித் தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

* “இலங்கை காப்புறுதி சபை" என்னும் பெயரை "காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு" என மாற்றுதல்;

* பொது காப்புறுதி தொழிலொன்றை அல்லது நீண்டகால காப்புறுதி தொழிலொன்றை பதிவு செய்வதற்கான தகைமைகளை நிர்ணயித்தல்;

* இலங்கை வெளியே அமைந்துள்ள பங்கு சந்தையொன்றில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு காப்புறுதிக் கம்பனியொன்றினால் ஆகக்குறைந்தது 85 சதவீதமான பங்குகளை கொண்டுள்ள ஏதேனும் உள்நாட்டில் நிருவகிக்கப்படும் கம்பனியொன்று, 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை பிணையங்கள் நாணயமாற்று ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உரிமப்பத்திரம் பெற்ற பங்கு சந்தையொன்றில் பட்டியலிடப்படும் தேவையிலிருந்தது விலக்களித்தல்;

* எவரேனும் காப்புறுதி முகவர் ஒருவருக்கு பொது காப்புறுதி கம்பனியொன்றிலும் நீண்டகால காப்புறுதி தொழில்முயற்சியொன்றிலும் சேவையாற்றுவதற்கு இடமளித்தல்.