• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கந்தளாய், ஹிங்குரான, செவனகல, பெல்வத்தை சீனி தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்தல்

- 2020 ஆம் ஆண்டில் நாட்டின் வருடாந்த சீனி தேவையின் 40 சதவீதம் வரை தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மேற்குறிப்பிட்ட நான்கு (04) தொழிற்சாலைகளையும் புனரமைக்கும் தேவை பற்றி சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் சீனி கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகள் அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டன. இந்த பிரேரிப்புகளில் உள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறாகும்:

* கந்தளாய், ஹிங்குரான, செவனகல, பெல்வத்தை சீனி தொழிற்சாலைகளுக்கு சொந்தமான 27,567 ஹெட்டயார் விஸ்தீரணமுடைய காணியின் பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொண்டு மேற்போந்த நான்கு (04) தொழிற்சாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 100 சதவீதம் அரசாங்கத்திற்கு உரிமையான வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனிக்கு 99 வருட காலத்திற்கு குத்தகைக்களித்தல்;

* செக் குடியரசின் ஒத்தாசையுடன் கந்தளாய் சீனி தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து நவீனமயப்படுத்தல்; அத்துடன்

* கமக்காரர்களிடம் கரும்பு கொள்வனவு செய்வதற்காக எதிர்காலத்தில் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதன் மூலம் கரும்பு செய்கை பண்ணுவதற்கு இந்த கமக்காரர்களுக்குக் காணித்துண்டுகள் வழங்கப்படும். ஏற்கனகே கரும்புச் செய்கையில் ஈடுபட்டுள்ள கமக்காரர்களுக்கும் இயைபுள்ள காணிகள் உள்ள மாவட்டங்களில் வதிந்துள்ளவர்களான கமக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.

மேற்போந்த அறிக்கையிலுள்ள பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.