• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க ஏற்றுமதி செயல்முறை வலயத்தின் மையப்படுத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதியை தரமுயர்த்துவதற்காக மின்னனு இயந்திர உபகரணங்களை வழங்குதலும் பொருத்துதலும்

- கட்டுநாயக்க ஏற்றுமதி செயல்முறை வலயத்தில் ஏற்கனவேயுள்ள தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளமை புதிதாக தொழிற்சாலைகள் தாபிக்கப்பட்டுள்ளமை என்பவற்றின் காரணமாக இந்த வலயத்திலுள்ள தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளமையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் கழுவுநீரை சுத்திகரிப்பதற்குரியதாக தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை நிறைவு செய்வதற்கு கட்டுநாயக்க ஏற்றுமதி செயல்முறை வலயத்தின் கழுவுநீர் சுத்திகரிப்பு பொறித்தொகுதியின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. வெற்றிபெறாத கேள்விதாரர்களிடமிருந்து இது சம்பந்தமாக மேன்முறையீடுகள் எதுவும் கிடைக்காமை பற்றியும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.