• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“நகமு புரவர" - தொடர்மாடி வீடுகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளினதும் நவீன மயப்படுத்தல்

- பொது திறைசேரியின் மூலம் வழங்கப்படவுள்ள நிதியங்களை பயன்படுத்தி “நகமு புரவர - 2014 " நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கூட்டாச்சி முகாமைத்துவ அதிகாரசபைக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கும் சொந்தமான பின்வரும் தொடர்மாடி வீடுகளின் நவீனமயப்படுத்தும் பணிகளை நடாத்திச் செல்வதற்காக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (02) பிரேரிப்புகளுக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) அரச அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவுள்ள 122.1 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் 09 வீடமைப்பு திட்டங்களை நவீனமயப்படுத்தும் ஒப்பந்தங்கள்.

* சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை வீடமைப்புத் திட்டம்;
* கெட்டவெலமுல்ல வீடமைப்புத் திட்டம், கொழும்பு - 08;
* மல்லிக்காராம வீடமைப்புத் திட்டம், கொழும்பு - 09;
* ஜயவடனகம வீடமைப்புத் திட்டம், பத்தரமுல்ல;
* இதழ்வத்தை வீடமைப்புத் திட்டம், மொரட்டுவை;
* எல்பிட்டிவல வீடமைப்புத் திட்டம், றாகம;
* டனிஸ்டர் த சில்வா மாவத்தை வீடமைப்புத் திட்டம், கொழும்பு - 09;
* ஜயகத்புர வீடமைப்புத் திட்டம், மொரட்டுவை; அத்துடன்
* குட்வில்வத்தை வீடமைப்புத் திட்டம், மொரட்டுவை.

(ii) அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படவுள்ள 620 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் 18 வீடமைப்பு திட்டங்களை நவீனமயப்படுத்தும் ஒப்பந்தங்கள்.

* ஹிம்புட்டு உயன வீடமைப்புத் திட்டம், முல்லேரியா;
* சிமென்டேல் வீடமைப்புத் திட்டம், பிலியந்தல;
* எல்விற்றிவல வீடமைப்புத் திட்டம், றாகம;
* சித்ரா ஒழுங்கை வீடமைப்புத் திட்டம், நாராஹேன்பிட்ட, கொழும்பு - 05;
* மாளிகாவத்தை புகையிரத ஊழியர் வீடமைப்புத் திட்டம், கொழும்பு - 10;
* டயஸ் பிளேஸ் வீடமைப்புத் திட்டம், புறக்கோட்டை, கொழும்பு - 12;
* கம்மலவத்த வீடமைப்புத் திட்டம், மருதானை, கொழும்பு - 10;
* மத்தேகொட வீடமைப்புத் திட்டம், கொட்டாவ;
* பாமன்கடை வீடமைப்புத் திட்டம், கிருளப்பனை, கொழும்பு - 06;
* ரொரின்டன் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்புத் திட்டம், கொழும்பு - 07;
* மெனிங் ரவுண், மாதா வீதி, வீடமைப்புத் திட்டம், நாராஹேன்பிட்ட, கொழும்பு - 05;
* கோத்தமி வீதி வீடமைப்புத் திட்டம், பொரளை, கொழும்பு - 08;
* எல்பியன் வீதி வீடமைப்புத் திட்டம் (போகஹவத்த தொடர்மாடி வீடு) ;
* சித்தார்த்தபுர வீடமைப்புத் திட்டம், கிருளப்பனை, கொழும்பு - 06;
* பிர்சாயிபு வீடமைப்புத் திட்டம், புதுக்கடை, கொழும்பு -12;
* இரத்மலானை தேர்தல் தொகுதியின் 20 வீடுகள், இரத்மலானை;
* கே மற்றும் ஜே நவலோக தொடர்மாடி வீடு, புதுக்கடை, கொழும்பு -12; அத்துடன்
* பேஸ்லைன் வீதி வீடமைப்புத் திட்டம், தெமட்டகொட.