• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 "தெயட்ட கிருல" தேசிய அபிவிருத்தி கண்காட்சிக்கு ஒருங்கிணைவாக தென்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்

- 2015 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள"தெயட்ட கிருல" தேசிய அபிவிருத்தி கண்காட்சிக்கு ஒருங்கிணைவாக, 85 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பின்வரும் நான்கு (04) வசுத்தரிப்பு நிலையங்களை நிருமாணிப்பதற்காக தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு ஆர்.எம்.சீ.பீ.ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :

* காலி மாவட்டம் - ஹபராதூவ வசுத்தரிப்பு நிலையம்
* மாத்தறை மாவட்டம் - அக்குரஸ்ஸ வசுத்தரிப்பு நிலையம்
* அம்பாந்தோட்டை மாவட்டம் - லுனுகம்வெகெர வசுத்தரிப்பு நிலையம்;
* அம்பாந்தோட்டை மாவட்டம் - வலஸ்முல்ல வசுத்தரிப்பு நிலையம்