• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாய்லாந்தில் நடாத்தப்பட்ட நிலைபேறுடைய அபிவிருத்தி பற்றிய ஆசிய பசுபிக் மன்றம்

- விஞ்ஞான அலுவல்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் தாய்லாந்தில் நடாத்தப்பட்ட மேற்போந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. இந்த மன்றத்தின் நோக்கமாவது புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி குறியிலக்கு மூலம் இடப்பட்ட அடிப்படையின் மீது கட்டியெழுப்பப்படும் 2015 ஆம் ஆண்டின் பின்னரான பலமிக்க அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்று தொடர்பில் உலகளாவிய உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதாகும். இந்த மன்றத்தினால் 32 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் அரசாங்க, வர்த்தக, சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் வலய மட்டத்திலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது. விஞ்ஞான அலுவல்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன.