• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்

- கழிவுத் தேயிலை மற்றும் கழிவுத் தேயிலை ஏற்றியிறக்கல் சம்பந்தமான கட்டளைகளை தயாரிக்கும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்குதல், சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றுக்கு குற்றவாளியாகக் காணப்படுதல், குற்றமொன்றுக்கு தண்டனை வழங்குதல் குற்றங்களை தீர்வு செய்தல் போன்ற விடயங்களுக்குரிய ஏற்பாடுகளை உள்ளடக்குவதன் மூலம் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்படும் ஒருவரிடமிருந்து அறவிடப்படக்கூடிய உச்ச தண்டப் பணத்தை ஐம்பாதாயிரம் ரூபாவிலிருந்து (50,000/=) ஐந்து இலட்சம் ரூபாவரையும் (500,000/=) குற்றமொன்றை தீர்வு செய்யும்போது அறவிடப்படக்கூடிய உச்ச தண்டப் பணத்தை பத்தாயிரம் ரூபாவிலிருந்து (10,000/=) ஐந்து இலட்சம் ரூபாவரையும் (500,000/=) அதிகரிப்பதன் மூலம் சட்டத்தைத் திருத்துவதற்காக பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.