• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை அபிவிருத்தி சட்டத்தின் நோக்கங்களுக்காக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து கொண்டுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், தங்குமிடங்கள் போன்றவற்றிலிருந்து அறவிடப்படும் உரிமப்பத்திர கட்டணங்களின் நூற்று வீதத்தை திருத்துதல்

- உள்ளூராட்சி நிறுவனங்களினால் இலங்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்து கொண்டுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், தங்குமிடங்கள் போன்றவற்றிலிருந்து தற்போது அறவிடப்படும் 1 சதவீதமான உரிமப்பத்திர கட்டணத்திற்குப் பதிலாக 0.5 சத வீதமான நிலையான உரிமப்பத்திர கட்டணமொன்றை அறவிடுவதற்கு இயலுமாகும் வகையில் மாநகர சபை கட்டளைச் சட்டத்திலும் நகர சபைக் கட்டளைச் சட்டத்திலும் பிரதேச சபைச் சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகள் சம்பந்தமாக திருத்த சட்டங்களை வரையுமாறு நட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.