• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
க.பொ.த(சா/த) பரீட்சையில் கணிதபாடம் சித்தியடையாததன் காரணமாக கட்டாய கல்வி கற்கும் வயதிலுள்ள பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதை தடுத்தல்

- க.பொ.த(சா/த) பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத பாடசாலை மாணவர்களை பாடசாலையில் தேக்கி வைத்துக் கொள்ளும் நோக்குடன் பின்வரும் விதத்தில் மேலும் வசதிகளை அளிப்பதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* க.பொ.த(சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இருப்பினும் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு இந்தப் பாடத்தை இரண்டு வருடகாலத்திற்குள் சித்தியடைவதற்கு வாய்ப்பு வழங்குதல்;

* க.பொ.த(உ/த) இல் கலைப்பாட பிரிவுக்கு மேலதிகமாக க.பொ.த(உ/த) இல் தொழினுட்ப விடயப் பிரிவில் உயிர்ப்பொருள் தொழினுட்ப பாடத்தை கற்பதற்காக இத்தகைய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்; அத்துடன்

* இத்தகைய மாணவர்களுக்கு கணித பாடத்திற்கு புறம்பான மேலதிக வகுப்புகளை நடாத்துதல்.