• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் மாலைத்தீவு குடியரசிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்

- அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் மாலைதீவு குடியரசுக்கு விஜயமொன்றை மேற்கொண்டது. இரு தலைவர்களுக்குமிடையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது பொருளாதார ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை, கலாசாரம், கடற்றொழில், கல்வி, சுகாதாரம், இளைஞர் அலுவலகள், தேர்ச்சி அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழில்வாய்ப்பு, உபசரணை மற்றும் சமூகப்பணிகள், சட்டத்துறை ஒத்துழைப்பு, விமானசேவை பணிகள் போன்றவை அடங்கலாக சகல துறைகளினதும் இருபக்க ஒத்துழைப்பினை மீளாய்வு செய்வதற்காகவும் அவற்றை இலங்கை மாலைதீவு கூட்டு ஆணைக்குழு கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்காகவும் இந்த ஆணைக்குழுவை புதிய பாதையில் கொண்டு செல்வதற்கு உடன்பாடு காணப்பட்டது. இந்த விஜயத்தின் போது இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.