• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தலும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள துரித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும்

- நாட்டில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக அநுராதபுரம், பொலன்நறுவை, அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார், வவுனியா, மொனராகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் அதேபோன்று கண்டி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 111,459 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆதலால் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன:

* இந்த மாவட்டங்களில் உள்ள குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் சேகரித்து வைக்கும் ஆற்றலை மேலும் அதிகரிப்பதற்கு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்;

* பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக 37 பவுசர்களைப் பயன்படுத்துதல்;

* இனங்காணப்பட்ட 600 கமத்தொழில் கிணறுகளை உடனடியாக புனரமைத்தல்; அத்துடன்

* மாதாமொன்றுக்கு 6,000/- ரூபா வழங்கும் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குழும்பங்களின் கமக்காரர்களின் பங்களிப்புடன் சிறுநீர்ப்பாசன முறைமை, கால்வாய் மற்றும் கிராமிய பாதைகள் போன்றவற்றை புனரமைத்து பராமரிப்பதற்காக "வேலைக்காக பணம்" கருத்திட்டத்ததை நடைமுறைப்படுத்தல்.

இயைபுள்ள மாவட்ட செயலாளர்களினூடாக இதற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காகவும் இந்த நோக்கங்களுக்காகவும் 1,304.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.