• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சாந்தாகுரூசில் நடாத்தப்பட்ட ஜீ.77 உச்சு மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமும் பொலிவியாவிற்கு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ விஜயமும்

- ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பொன்றாகிய ஜீ 77 குழு 133 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளதோடு, அதன் 50 ஆவது ஆண்டு மாநாட்டிற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று பொலிவியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டது. இந்த மாநாட்டில் உரையாற்றிய அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஜீ 77 இன் ஆரம்ப நோக்கமான ஒற்றுமை, ஒத்துழைப்பு, அபிவிருத்தி என்பன தற்காலத்துக்கும் ஏற்புடையதாகுமெனவும் வியானா தரப்பின் தற்போதைய தலைமைத்துவத்தை வகிக்கும் இலங்கை அதன் எல்லைக்குள் இந்தக் குழுவுடன் நெருக்கமாக நடவடிக்கை எடுக்கின்றதெனவும் குறிப்பிட்டார். அத்துடன் அபிவிருத்தி அடைந்த நாடுகள் உடன்பட்டவாறு தங்களுடைய தேறிய தேசிய வருமானத்திலிருந்து 0.7 சதவீதத்தை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கினால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெரும்பாலனவை வறுமையிலிருந்து விடுபட்டு ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிவிருத்தி மட்டத்தை அடைய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். அதிமேதகைய சனாதிபதி அவர்கள் கியூபா, உருகுவே, இக்வடோறியல் கினியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சனாதிபதிகளுடனும் கபோன் நாட்டின் பிரதமருடனும் இருபக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பொலிவியாவின் சட்டவாக்க சபையினால் சமாதானம், சனநாயகம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் அர்ப்பணிப்பினை அங்கீகரித்து இலங்கையின் அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு பொலிவியாவின் அதியுயர் விருதான "Parliamentary Order to the Democratic Merit - Deputy Marcelo Quiroga Santa Cruz” வழங்கப்பட்டது. இந்த கௌரவ விருது வெளிநாட்டு அரசாங்க தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.