• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு திட்ட செயலகத்திற்காக காணியொன்றைப் பெற்றுக் கொள்ளல்

- தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு மூலதன மற்றும் தொழினுட்ப ஒத்தாசையை வழங்கும் சருவதேசக பொறிமுறையொன்றாக இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை உட்பட 7 நாடுகளின் பங்களிப்புடன் 1951 ஆம் ஆண்டில் கொழும்புத் திட்டம் தாபிக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு 27 நாடுகளைக் கொண்டுள்ளது. இலங்கையை அதன் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரே சர்வதேச அமைப்பு இதுவாகும். கொழுப்புத் திட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அரசாங்க துறையின் அறிவு மற்றும் ஆற்றல் அபிவிருத்தியின் பொருட்டு வருடாந்தம் சுமார் 50 வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இது மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு படிப்படியாக விரிவாக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது கொழும்புத் திட்ட செயலகத்திற்கு கொழும்பு பிரதேசத்திலுள்ள காணித் துண்டொன்றை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.