• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண சந்தை கட்டட நிருமாணிப்பு

- ஹொரண நகரத்தையும் அதன் அண்மித்த பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பிரதான திட்டமொன்று வகுத்தமைக்கப்பட்டுள்ளதோடு, வசுத் தரிப்பு நிலைய அபிவிருத்தி, சந்தை நவீனமயப்படுத்தல், வாரந்த சந்தை நிருமாணிப்பு போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 400 விற்பனை நிலையங்களையும் வாகன தரிப்பிட வசதி உட்பட ஏனைய வசதிகளையும் கொண்ட இந்த வாரந்த சந்தையானது அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இயைபுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.