• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகள் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல்

- கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகள் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக சுமார் 65,000 வீட்டு அலகுகளை நிருமாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. இந்தக் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக சகல வசதிகளுடன் கூடிய பல்மாடி கூட்டாட்சி வீடுகளை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் விடுவிக்கப்படும் காணிகள், கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மேற்போந்த விதத்தில் வீட்டு அலகுகளை நிருமாணிப்பதற்காகவும் அதேபோன்று கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்கள், சுற்றுலாத்துறை நடவடிக்கைகள், ஒதுக்கங்களைப் பேணுதல், களியாட்ட செயற்பாடுகள் போன்றவற்றிற்காகவும் பயன்படுத்தப்படும். இந்த நோக்தக்திற்காக கண்டறியப்பட்ட சில அரச காணிகளை இறையிலி கொடைகளாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.