• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தலும் கம்பஹா தொழினுட்ப கல்லூரியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமும்

- கொரிய பொருளாதார அபிவிருத்து ஒத்துழைப்பு நிதியத்தின் (Economic Development Cooperation Fund EDCF) கடன் வசதிகளின் கீழ் கொழும்பு மாவட்டத்தின் ஊருகொடவத்தை பிரதேசத்தில் வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலைய மொன்றைத் தாபிப்பதற்கும் கம்பஹா தொழினுட்பக் கல்லூரியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இலங்கை அரசாங்கமும் கொரிய பொருளாதார அபிவிருத்து ஒத்துழைப்பு நிதியமும் கடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக தொழினுட்பவியல் கல்வி தொடர்பிலான கொரிய பல்கலைக்கழகத்திடமிருந்து மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.