• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, களனி, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்

- மேற்போந்த ஆறு (06) பல்கலைக்கழகங்களுக்கும் உரியதான பின்வரும் நிருமாணிப்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
(i) பட்டப்படிப்பு கல்வி பீடத்திற்கான கட்டட நிருமாணிப்பு
(ii) விளையாட்டு மற்றும் களியாட்டக் கட்டடத்தொகுதி (விளையாட்டுக்கூடம்) நிருமாணிப்பு

* சப்பிரகமுவ பல்கலைக்கழகம்
(i) வடிவியற் பீட கட்டட நிருமாணிப்பு - கட்டம் II

* களனி பல்கலைக்கழகம்
(i) சமூகவியல் பீடத்திற்கான ஐந்து (05) மாடிக் கட்டடத்தை விரிவுபடுத்தல்.
(ii) மருத்துவபீடத்திற்கான பல்நோக்கு கட்டட நிருமாணிப்பு - கட்டம்I

* பேராதெனிய பல்கலைக்கழகம்
(i) கல்வியியல் கல்லூரியின் புவியியல் திணைக்களத்திற்கான மூன்று (03) மாடிக் கட்டட நிருமாணிப்பு - கட்டம் II

* ஹோமாகம பௌத்த பாளி பல்கலைக்கழகம்
(i) பிரேரிக்கப்பட்ட துணைவேந்தர் உத்தியோகபூர்வ விடுதி நிருமாணிப்பு

* இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம்
(i) கமத்தொழில் பீடத்திற்கான கட்டடத்தொகுதி நிருமாணிப்பு