• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி முறியுடன் உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நிதியங்களின் மூலம் முன்னுரிமை நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் - நான்கு (04) கருத்திட்டங்களின் ஒப்பந்தங்களை வழங்குதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் பின்வரும் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* கொழும்பு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள நகரத்திற்கான நீர் வழங்கல் கருத்திட்டம் - I ஆவது பொதிக்கான ஒப்பந்தம்;

* றுகுணுபுர நீர்விநியோக நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம்;

* அம்பாறை நீர்விநியோக நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம்;அத்துடன்

* பெந்தோட்டை நீர்விநியோக நீர் வழங்கல் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம்;