• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு கொக்குளாய் - புல்மோட்டை வீதியின் கொக்குளாய் களப்புக்கூடாக கொக்குளாய் பாலத்தையும் அதன் நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல்

- கடற்கரை ஊடாக கிழக்கு மாகாணத்திற்கும் வடமாகாணத்திற்கும் இடையே நிலத்தொடர்பினூடாக தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு முல்லைத்தீவு கொக்குளாய் - புல்மோட்டை வீதியின் கொக்குளாய் களப்புக்கூடாக புதிய பாலமொன்று நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.