• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

- மேற்போந்த விடயங்களுக்கு இயைபான ஒழுங்கு விதிகள் உள்ளடங்கிய 2014‑05‑19 ஆம் திகதியிடப்பட்டதும் 1863/4 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.