• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தல்

- விளையாட்டுத்துறை அமைச்சும் உயர் கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் வேலைத்தளத்திலேயே விளையாட்டில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குதல், நடைபாதை நிரல்களை உருவாக்குதல் ஊழியர்களுக்கு விளையாட்டுக்கான ஊக்குவிப்புகள், பாடசாலைகளில் விளையாட்டுக்கான பாடத்தை கட்டாயப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் விளையாட்டுத்துறைக் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தின் மூலம் அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச விளையாட்டுத் தினம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஏப்ரல் 06 ஆம் திகதியன்று இலங்கையின் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.